திமுக., தினமும் ஒவ்வொரு பொய் சொல்கிறது; அடுத்த சட்ட சபையில் பாஜக., ஒரு மாற்றுக் கட்சியாக இருக்கும்!

subramaniam swami - 2026

ஆட்சியை கலைத்தால் ரத்த ஆறு ஓடும் என்றார் கருணாநிதி, ஆனால் சைக்கிள் கூட எரியவில்லை மதுரையில் சுப்பிரமணியசாமி பேச்சு.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்தி பேசினர்.

இதையடுத்து மேடையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது.

நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம் தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம்.

ராணுவ உற்பத்தி அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் நாம் நம்பர் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தோம் அதனால் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்து நம்மை பிரித்தனர். பாரத மாதா நம்பர் ஒன் என்று மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கை ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும் என்றார்.

கருணாநிதி என்னிடம் பேசும் போது திராவிட என்று கூறினார் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன் அது சமஸ்கிருதம் என்று கூறினேன். உங்களின் பெயரில் 40% சமஸ்கிருதம் என்று அவரிடம் விளக்க நூலை வைத்து விவரித்தேன். சங்கராச்சாரியார், ஆதி சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தை எடுத்துச் சென்று அனைவரையும் தோற்கடித்தார்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

ஆங்கிலேயர்கள் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினையை உண்டாக்கினார்கள். திராவிடா என்பதில் திராவிட என்பது மூன்று கடலும் சங்கமிக்கும் இடம் என்று பொருள் இது திராவிடமாக மாறியது. நானும் கருணாநிதியும் பலமுறை சண்டையிட்டுக் கொள்வோம் ஆனால் எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது.

ராம் சேது திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்த போது நான் அவரை எதிர்த்தேன் அதற்கு யார் ராமர் என்று கருணாநிதி என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மறுநாள் அவர் உடல் நலம் குன்றி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நான் அவருக்கு “கெட் வெல் சூன்” ராமர் யார் என்று தெரிகிறதா என்று கூறினேன்.

தமிழன் மூளையில் நம்பர் ஒன்னாக இருக்கிறான் ஆனால் தைரியம் இல்லை. என்னை ஏன் இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள் என்று வட மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

புதிய தமிழனை உருவாக்க வேண்டும் ஆரியன், திராவிடன் என்ற வார்த்தை இல்லை. திமுகவின் செயலாளர் ராஜ மோசமாக பேசி வருகிறார். அது தொடர்பாக வழக்கு ஒன்றை கொடுத்துள்ளேன் விரைவில் அவர் சிறைக்கு செல்வார்.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

திமுக தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது அடுத்த சட்ட சபையில் ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும். கம்பராமாயணத்தை எழுதிய வால்மிகியும் ஒரு செட்டியூல் காஸ்ட் தான். ஆனால் அவரின் தாய் தந்தை பிராமணராக இருந்தவர்கள்.

யாராவது தகராறு செய்ய தயாராக இருந்தால் நானும் தகராறு செய்ய தயாராக இருக்கிறேன். LTT – அடிப்பட்டு தமிழ்நாட்டில் சிகிச்சையளிக்க கூடாது அப்படி அளித்தால் ஆட்சிக்கலைப்படும் என்றேன். ஆட்சியை கலைத்தால் ரத்த ஆறு ஓடும் என கருணாநிதி என்னிடம் கூறினார்

1991-ம் ஆண்டு ஜனவரி – 31 ல் ஆட்சி கலைந்தது. ஆனா ஒரு சைக்கிள் கூட எரியவில்லை. அடுத்த 2 மாத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

கருணாநிதி தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தவர் தமிழில் பெயரை வைக்கவில்லையே எங்கிருந்து வைத்தார். ரஷ்யன் பெயரை வைத்துள்ளார். தமிழ் தாய்மொழி. இந்தி கற்றுக் கொண்டால் என்ன தவறு. கட்டாயம் என்று நான் கூறவில்லை இந்திய கற்றுக் கொள்ள விரும்புவர்களை ஏன் தடை போடுகிறீர்கள் என்று தான் கேள்வி எழுப்புகிறேன்.

பெரியார், பெரியார் என்று கூறுபவர்கள் இன்று பெரியார் இருந்திருந்தால் இன்று திமுக இருந்திருக்காது. பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர் ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில் கட்டி கொடுத்து கோயிலை தனது மகன் ராமசாமி நாயக்கர் பராமரிப்பார் என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி
கோயிலை முறையாக பராமரித்திற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றுள்ளார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இது கி.வீரமணிக்கு தெரியுமா? அவர் எங்கே இருக்கிறார் ஓடிப் போய்விட்டார்.கோயில்களில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என போடப்பட்டது. வெள்ளைக்காரன் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில் தான்.

நமது சட்டப்படி எந்த கோவிலையும் அரசு எடுத்துக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. தமிழ் நாட்டில் உள்ள 32 ஆயிரம் கோயில் திமுக அரசு கையில் இருப்பதை விடுதலை செய்ய வேண்டும். கோயிலை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்..ஆனா எல்லா கோயிலையும் கையில் எடுத்து அர்ச்சகர் நியமிக்கிறார்கள். எல்லா கோயிலையும் மீட்டெடுத்து பூசாரி கையில் கொடுப்பேன்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி பணியாற்ற உள்ளேன். எல்லோரும் ஆதரவு தாருங்க என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Entertainment News

Popular Categories