எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Published:

gas leak from cylinder in lorry - 2026

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து மக்கள் எச்சரித்த போது, அதுலாம் ஒண்ணும் ஆகாது குடோன்ல அப்படிதான் அனுப்புனாங்க என அலட்சியமாகச் சொல்லி நடந்து கொண்ட ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்களை ஏற்றியபடி லாரி ஒன்று சென்றுள்ளது. அதில் வைக்கப்பட்ட சிலிண்டர் ஒன்றில் கேஸ் லீக் ஆகி வெளியேறியுள்ளது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வாகனத்தை ஓட்டிசென்ற ஓட்டுனரிடம் இது குறித்து கூறியபோதும் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் லாரியை பின் தொடர்ந்து சென்று லாரியை நிறுத்தி தயவுசெய்து லீக் ஆகும் சிலிண்டரை தனியாக எடுத்து எதாவது செய்து லீக்கை தடுங்கள் எனவும், இல்லையென்றால் பெரிய விபத்தாகிவிடப் போகிறது என கூறினர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஏன் நிறுத்துகிறீர்கள்? அதுலாம் ஒன்றும் ஆகாது என அலட்சியமாக கூறிவிட்டு லீக் ஆன சிலிண்டரை சாய்த்துவைத்துவிட்டு லாரியை ஓட்டுனர் எடுத்துசென்றார். இதனைப் பார்த்த பொதுமக்கள் கேஸ் லீக் ஆன நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் செல்வதாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இந்தக் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பாதுகாப்புடன் எடுத்து
செல்லப்பட வேண்டிய கேஸ் சிலிண்டர்களை லீக் ஆன நிலையில் பெரும் விபத்தை ஏற்படுத்தும் என தெரிந்தும் அலட்சியமாக செயல்பட்ட கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் சிலிண்டர்களை கையாளும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img