alwarthirunagari adhinathar temple - 2026

அடாத செயலில் ஆழ்வார்திருநகரி கோயில் ஈ.ஓ.,: பாஜக., நாளை உண்ணாவிரதம்!

நெல்லை Featured அடடே... அப்படியா? அரசியல் ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன்
alwarthirunagari adhinathar temple - 2026

பெருமாள் சயனத்தை முன்கூட்டியே கலைக்க உத்தரவிட்டு, கோயில் வழிபாட்டு நடைமுறைகளில் மாற்றம் செய்யத் தலையிட்டுள்ள ஈ.ஓ., செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக., உண்ணாவிரத போராட்டத்தை நாளை நடத்துகிறது. 

அறநிலையத் துறையே ஆலயத்தை விட்டு வெளியே போ என்ற கோஷத்துடன், இந்த விவகாரம் குறித்து பாஜக.,வினர் குறிப்பிட்டபோது,  

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோவில் ஆண்டு தோறும் நடைபெறும் மார்கழி மாதம் பகல் பத்து இராபத்து மிக முக்கியமான திருவிழா ஆகும். பகல் பத்தின் கடைசி நாளான அன்று ஆதிநாத பெருமாள் அன்று முழுவதும் சயன திருக்கோலத்தில் காட்சி தருவார். 

ஆனால் ஆழ்வார்திருநகரி கோவில் செயல் அலுவலர்  அஜித் வழக்கத்திற்கு மாறாக சயனக் கோலத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டும் என கூறி தொன்று தொட்டு நடைபெறும் கோவில் நடைமுறைகளில் தலையிட்டு பல வருடங்களாக சொர்க்க வாசல் திறக்கும் நேரத்தை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

கோவில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு எந்த உரிமையும் இல்லை. அறநிலைத்துறை அதிகாரியை கண்டித்து பா.ஜ.க. சார்பாக ஆதிநாதர் கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டம் டிச.29 அன்று,  நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.