
செங்கோட்டையில் தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பில் மகளிருக்கு தொழில் உபகரண பொருட்கள் வழங்கல்.
செங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன் ஆலோசனையின்படியும் தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி வழிகாட்டுதலின் படியும் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் நயினார் பாலாஜி அறிவுறுத்தலின் படியும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் துறையில் முன்னேறும் வகையில் அவர்கள் தொழில் செய்வதற்கு ஏதுவான தொழில் உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு செங்கோட்டை நகர தலைவர் முத்துமாரியப்பன் தலைமைதாங்கினார். விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் செந்தமிழ்செல்வன் நகர பார்வையாளர் கருப்பசாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
நகரச் செயலாளர் லக்ஷ்மணன் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து பயனாளிகளுக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில பொறுப்பாளர் பொன்னுலிங்கம்(எ)சுதன் தொழில் உபகரணப்பொருட்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் நகரத் துணைத்தலைவர்கள் புதியவன், ஆறுமுகம், சுந்தரம் ஐடி விங் நகரதலைவர் செல்வகுமார் சக்தி கேந்திர பொறுப்பாளர் காளி தொழில்துறை பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர ஆன்மீக பிரிவு தலைவர் மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.




