பஸ் பலகை உடைந்து சாலையில் விழுந்த பெண்: அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

Published:

 

திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்தின் தென்காசி டிப்போவில் இருந்து தினமும் ஒரு பஸ் கேரள மாநிலம், புனலூர் வழியாக கொட்டாரக்கரைக்கு இயக்கப்படுகிறது. டிஎன் 72- என் 1586 பதிவு எண் கொண்ட இந்த பஸ் புனலூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்தபோது, பஸ்சில் பின்புறமுள்ள சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண் எழுந்து நின்றபோது, பஸ்சிற்குள் அமைக்கப்பட்டிருந்த மரப்பலகை திடீரென உடைந்தது.

இதனால் அந்தப் பெண் கையில் வைத்திருந்த பையோடு பஸ்சின் உள்புறத்தில் இருந்து கீழே விழுந்தார். பஸ்சின் கடைசி சீட்டிற்கு முன்புறம் என்பதால் பஸ் கடந்துவிட்டது. பஸ் ஸ்டாண்ட் என்பதால் வேறு வாகனங்கள் எதுவும் பின்தொடரவில்லை. இதனால் அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ரோஸ்நிற சுடிதார் அணிந்திருந்த இளம்பெண் ஸ்வாதி பின்னர் ஒருவாரு சுதாரித்து எழுந்து உடனடியாக அங்கிருந்து கிளம்பினார். பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து வீடியோ எடுத்த நபர், தற்செயலாக இந்த காட்சியை வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ காட்சி நேற்று வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணைய தளங்களில் பரவியது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பஸ்சை கவனிக்காமல் தடத்தில் இயக்க அனுமதித்த அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர், உதவிப் பொறியாளர், கண்டக்டர், டிரைவர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காயமடைந்த பெண் ஸ்வாதி தந்த புகாரின் பேரில் புனலூர் போலீசார், நெல்லை பஸ் டிரைவர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img