நெல்லை அருகே கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

Published:

நெல்லை:

நெல்லை அருகே நான்கு வழிச் சாலையில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை நாங்குநேரி வாகைகுளம் புதுகாலனி நான்குவழிச் சாலையில் நாகர்கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், ஒரு வளைவில் திரும்பிய போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பெண்கள் 2 பேர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியில் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த நாங்குநேரி டிஎஸ்பி பொன்னுசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img