இதய கொள்ளை !

அம்மா முற்றத்தில்
அரிசி புடைத்து கொண்டிருந்தார் !

அப்பா தோட்டத்தில்
களை எடுத்து கொண்டிருந்தார் !

தங்கை துணிகளை
துவைத்து கொண்டிருந்தாள் !

தம்பி பற்களை
துலக்கி கொண்டிருந்தான் !

எதிர் வீட்டில்
நீயோ
கோலம் போடும் சாக்கில்
என் இதயத்தை
கொள்ளையடித்து கொண்டுள்ளாய் !