பாட்டி மாதிரியே பேத்தி இருப்பதாலே…!

Published:

indira priyankagandhis - 2026

தேர்தல் நேரம்… கருத்துகளும் நையாண்டிகளும் களை கட்டுகின்றன. முன்னர் பத்திரிகைகளில் கேலி சித்திரம் வாசகரைக் கவர்ந்தது என்றால் இப்போது மீம்ஸ்கள் களை கட்டுகின்றன. கதைகளும் நிறைந்து காணப்படுகின்றன.

அப்படி இணையத்தில் உலா வரும் ஒரு கதை இது. இந்தப் படத்துக்கும் கதைக்கும் தொடர்பில்லை என்று சொல்லி வாட்ஸ் அப்பில் உலாத்தும் கருத்துக் கதை இது…!

நேற்று என் நண்பரைச் சந்தித்தேன். அவர் தற்போது கண் ஆபரேஷனுக்காக டெல்லிக்குப் போவதாகக் கூறினார்.

ஏன் டெல்லிக்குப் போக வேண்டும்..? சென்னையிலேயே எத்தனையோ நல்ல மருத்துவமனைகள் இருக்கேன்னு கேட்டேன்.

அதற்கு அவர் இல்லை 35 வருஷத்துக்கு முன்னர் டெல்லியில் ஒரு பிரம்மாண்டமான டாக்டர் என் அம்மாவுக்கு கண் ஆபரேஷன் செய்தார். அதனால் அங்கு போகிறேன் என்றார்..!

சந்தேகத்துடன்.. 35 வருடத்துக்கு முன் இருந்த டாக்டர் இப்போதும் அங்கேயே இருக்கிறாரா என்று நண்பரைக் கேட்டதற்கு.. ச்சே.. ச்சே… அந்த டாக்டர் எப்பவோ பரலோகப் பிராப்தி அடைந்து விட்டார். அவர் பேத்தியிடம் ஆபரேஷன் செஞ்சுக்கப் போகிறேன் என்றார்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

நானும் ஓ.. அவரும் சிறந்த கண் மருத்துவரா.. என்று கேட்டதற்கு … நண்பர்.. இல்லையில்லை.. அவர் டாக்டரெல்லாம் இல்லை. டெல்லியிலுள்ள உணவுக் கூடத்தில் ஆயாவாக இருக்கிறார் என்று பெருமையாக்க் கூறுனார்.

எனக்கு ஒன்றும் புரியாமல்.. அப்படியானால் எப்படி நம்பி உங்கள் கண்ணை ஆபரேஷனுக்கு அவரிடம் ஒப்படைப்பீர் என்றேன். ????????????

அவரும் அதனால் என்ன.. உணவுக் கூடத்தில் ஆயாவாக இருக்கும் பேத்தி பார்ப்பதற்கு பாட்டி மாதிரியே இருப்பதால் தைரியமாக என் கண்ணை ஒப்படைப்பேன் என்று மார் தட்டிக் கொண்டே சொன்னார்..!

Related articles

Recent articles

spot_img