Ponniayan 16554578583x2 1 - 2026

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையா? -பொன்னையன்

அரசியல்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையா? என்பது குறித்து கட்சித் தலைமையும், பொதுக்குழுவுமே முடிவு செய்யும் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்திய பின் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

அதிமுக ஒற்றைத்தலைமைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஒற்றைத்தலைமை கோரிக்கையை தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஒற்றைத் தலைமை தேவையா என்பது குறித்து கட்சித் தலைமையும், பொதுக்குழுவுமே முடிவு செய்யும். திட்டமிட்டபடி பொதுக்குழு வரும் 23ம் தேதி நடைபெறும். அதிமுக பொதுக்குழு கூட்டம் 100க்கு 1000% நடைபெறும். ஒற்றைத் தலைமை குறித்த முடிவுகள் பேசப்படுமா என எனக்கு தெரியாது. ஜெயக்குமார் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Ponniayan 16554578583x2 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.