1194786 state 07 - 2026

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை பரபரப்பு பேச்சு..

அரசியல்
1194786 state 07 - 2026

திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை கலந்து கொண்டு பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கூட்டத்தில் அவர் மேலும் பேசியது கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன்.

திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை.

பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். அவரது பேச்சு குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேர்தல் தொடர்பான முடிவை பேசும் நேரம் இதுவல்ல. தேசிய தலைமை முடிவு எடுக்கும்.

பா.ஜ.க. உயர்மட்ட குழுவில் இது குறித்து பேச வேண்டும்” என்று கூறினார். இதனிடையே அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியிருந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சு பா.ஜ.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.