
மாரியம்மன் கோவில் அருகே மாட்டுக் கறி பிரியாணி கடை – கேள்வி கேட்டவர் மீது பொய் வழக்கு – போராடத் திரண்ட ஊர் மக்கள் – தமிழகம் முழுக்க கோவில்களுக்கு அருகில் உள்ள இறைச்சி கடைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், உடையாம்பாளையம் பகுதியில் மிகவும் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. மக்கள் அன்றாடம் வழிபட்டு வருகின்ற கோவிலின் அருகே இறைச்சி கடைகள் இருக்கக் கூடாது என்பது அந்த ஊரின் கட்டுப்பாடு. அதையும் மீறி சில மாதங்களாக அங்கே முஸ்லிம் தம்பதியினர் மாட்டுக்கறி பிரியாணிக் கடையை நடத்தி வந்தனர்.
உடையாம்பாளையம் கிராமத்தின் ஊர் பெரியவர்களில் ஒருவரும், பாரதிய ஜனதா கட்சியினுடைய பொறுப்பாளருமான சுப்பிரமணியம் அவர்கள் மாரியம்மன் கோவில் அருகே இறைச்சி கடை இருக்கக் கூடாது என்பது பல ஆண்டுகளாக கட்டுப்பாடு. அதன் அருகே நீங்கள் மாட்டுக்கறி வியாபாரம் செய்ய கூடாது எனவும் அந்த கடை உரிமையாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பிரியாணி வியாபாரம் செய்து வரும் முஸ்லிம் தம்பதியினர் சில முஸ்லிம் அமைப்புகளை திரட்டி கொண்டு கோவை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் சுப்பிரமணியம் அவர்கள் எங்களை மாட்டுக்கறி பிரியாணி கடை நடத்தக் கூடாது என மிரட்டுகிறார் என புகார் அளித்தனர். மாட்டுக்கறி பிரியாணி வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்ல இவர் யார்? என்றும் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டதா? என்றும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தனர்.
நடந்ததை முழுமையாக விசாரிக்காமல் காவல்துறையும் சுப்பிரமணியம் அவர்கள் மீது நான்கு பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்தது.
இரண்டு நாட்களாக சில ஊடகங்கள் நடந்தது என்னவென்று தெரியாமல் சுப்பிரமணியம் அவர்கள் தான் பிரியாணி கடை வைத்திருப்பவர்களை மிரட்டினார் என செய்தி வெளியிடுகின்றன.
சிறுபான்மைக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் எப்பொழுதும் போல தமிழக அரசும் காவல்துறையும் அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
கோவில்கள் என்பது புனிதமான இடம். கோவில்களின் முன்பு இறைச்சி பிரியாணிக் கடை நடத்துவது என்பது பக்தர்களுடைய மனதை புண்படுத்துவதாக அமைகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சேலம் மாவட்டத்தில் கோவில் முன்பாக இறைச்சி கடை நடத்தி வந்ததை பொதுமக்களும் பக்தர்களும் திரண்டு கேள்வி கேட்டனர். இந்த விவகாரத்தில் இந்து முன்னணி பேரியக்கம் தலையிட்டு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த உதவியது.
இதே போல தமிழகம் முழுக்க பல்வேறு கோவில்களின் முன்பாக இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு மரியாதை அளிக்காத அரசு இதைக் கண்டு கொள்வதில்லை. இது போன்ற சம்பவங்கள்தான் சமுதாயத்தில் ஜாதி மதக் கலவரங்களை உருவாக்கும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.
தமிழகத்தில் பல கோவில் இடங்களில் கூட அனுமதி இல்லாமல் பல இறைச்சிகடைகளும் பிரியாணி கடைகளும் நடந்து வருகின்றன. இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? இது சுகாதாரமானது தானா? என்பது பற்றி எல்லாம் அரசாங்கமும் நிர்வாகமும் கவலைப்படுவதில்லை.
பசுக்களை தெய்வமாக வணங்கும் இந்துக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதியில் திட்டமிட்டே மாட்டிறைச்சி உணவுகள் விற்கப்படுகின்றன என்பதையும் இந்த அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் எங்கெல்லாம் கோவில்கள் முன்பு இது போன்ற அசைவ உணவு கடைகள் இருக்கிறதோ அதையெல்லாம் தமிழக அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இந்நிலையில் கோவை – உடையாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் அருகே மாட்டு கறி பிரியாணி கடை நடத்திய விவகாரம், இந்துக்கள் மத்திய மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் இந்த மாட்டுக்கறி பிரியாணி கடையை உடனே அகற்ற வேண்டும் எனவும் அந்தக் கடையை அப்புறப்படுத்த கோரிய சுப்பிரமணியம் அவர்கள் மீது பதிவு செய்த பொய் வழக்கை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களும் குடும்பத்தோடு வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆகவே பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் எனவும் சுப்பிரமணியம் அவர்கள் மீது பதிவு செய்த வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி பேரியக்கத்தின் வலியுறுத்துகிறது.





