
STAY ALERY, STAY VIGILANT! – விழிப்புடன் இருங்கள். பொய்ச் செய்திகளை நம்பாதீர்கள். பொய்ச் செய்திகளை பரப்பாதீர்கள். இது இந்திய ராணுவத்தின் வேண்டுகோள்.
வரும் நாள்களில் உங்கள் சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ஆதரவு பிரச்சாரங்கள் பெருமளவில் பரவக்கூடும். ஒவ்வொரு தகவலையும் தெளிவாக ஆராய்ந்து பார்வையிடுவது மிகவும் அவசியம்.
இந்திய ஆயுதப்படைகள் குறித்தும், தற்போதைய நிலையைப் பற்றியும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதையும் நீங்கள் சந்தித்தால், உடனடியாக PIBFactCheck-இல் புகாரளிக்கவும்.
WhatsApp: +91 8799711259
Email: factcheck@pib.gov.in #OperationSindoor – என்று மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகமான பிஐபி அறிவுறுத்தியுள்ளது.
பொய்ச் செய்திகளுக்காகவே PIB Fact Check எனும் பக்கத்தை நிர்வகித்து வருகிறது. அதில், பொய்யாக பரவும் வீடியோக்கள், பழைய வீடியோக்கள் குறித்து தெளிவான தகவல்கள் அளிக்கப்படுகின்றன.
பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அந்த வலையில் இந்தியர்களாகிய நாம் விழ வேண்டாம். மத்திய அரசு மற்றும் ராணுவத்தால் உறுதிப்படுத்தப்படாத எந்த செய்தியையும் நம்ப வேண்டாம், பிறருக்கு அனுப்ப வேண்டாம். விழிப்புடன் இருப்போம். தேசம் காப்போம்.





