
சென்னை விமான நிலையம் அருகில் ஹஜ் விடுதி அமைத்து தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் தமிழக அரசை கண்டிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் இதனை அறிவித்தபோதே இந்து முன்னணி சார்பில் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டோம்.
2012 ஆண்டு செப்டம்பர் 15 முதல் 18 வரை சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையை இஸ்லாமிய அமைப்புகள் ஸ்தம்பிக்க வைத்தன. தடை செய்யப்பட்ட அமெரிக்க சினிமாவை கண்டிப்பதாக இந்த ஆபத்தான செயல் அரங்கேற்றப்பட்டதை நினைவு கூர்கிறோம்.
சென்னை – சூளை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ் இல்லம் கட்டப்பட்டது. அதிலிருந்து அந்த சாலை வழியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சாமி ஊர்வலம் தடுக்கப்படுகிறது.
தற்போது ஹஜ் விடுதி கட்டப்படும் இடமானது பிற்பட்ட சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசின் இடம். இந்த இடத்தில் பிற்பட்டோர் சமூக மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்ளலாம். இந்துக்களுக்காக இருந்த இடத்தை முஸ்லிம்களுக்கு வாரித்தருவது கண்டிக்கத்தக்கது.
மேலும் ஹஜ் விடுதி என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. முஸ்லிம் குழுக்களின் நிர்வாகத்தில் பெரும்பாலும் இருக்கிறது. இந்த இடத்தில் பல மர்ம நபர்கள் மற்றும் தேச விரோத சதிகள் நடக்க ஏதுவாக அமைந்த உதாரணங்கள் உள்ளது என்பதை எச்சரிக்கிறோம்.
சர்வதேச, உள்நாட்டு சென்னை விமான நிலையம், தென் தமிழகத்திற்கு செல்வதற்கான சாலை மார்க்கம், ரயில் தடம் மற்றும் உள்ளூர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என இவை அனைத்தும் உள்ளது இப்பகுதி.
இவை தவிர இராணுவ மையம் மற்றும் முக்கிய அலுவலகங்கள் இங்கு தான் உள்ளன.
இத்தகைய பாதுகாப்பான, முக்கியமான இடத்தில் ஹஜ் விடுதி அமைப்பது, நாளை இஸ்லாமிய அமைப்புகள் நினைத்தால் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் சீர்குலைத்து விடும் அபாயம் உள்ளதை உளவுத்துறை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் அண்ணா சாலையில் செய்ததுபோல ஸ்தம்பிக்க வைக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
இதனையெல்லாம் புறந்தள்ளி இஸ்லாமிய அமைப்புகளின் சதிக்கு தமிழக முதல்வர் உடந்தையாக செயல்படுகிறாரா என்ற சந்தேகம் வருகிறது. திமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டு வங்கி தான் கண்களுக்கு தெரிகிறது. அதன் காரணமாக தான் கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் அருகில் நடந்த தற்கொலை கார் குண்டு வெடிப்பை சிலிண்டர் விபத்து என திசைத்திருப்ப முதலில் முனைந்தது என்பதை மக்கள் மறக்க வேண்டாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, தமிழகத்தின் நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 50 கி.மீ.க்கும் ஒரு மசூதி மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய விளம்பரம் செய்து இருந்தது. இத்தகைய நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் ஏற்படும் அபாயத்தை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் நீதிமன்ற தீர்ப்பை, சட்டத்தை, புலனாய்வு அதிகாரிகள் குறிப்பை ஏற்க மறுத்து சர்வாதிகாரியாக செயல்படுவது பகிரங்கமாக தெரிகிறது. அதற்கு உதாரணம் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற மறுத்த காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடு ஆகும்.
நங்கநல்லூர் ஹஜ் விடுதி தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஆகும்.
எனவே நங்கநல்லூரில் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டிய ஹஜ் விடுதி அமைவதற்கு இராணுவ அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பு, விமான போக்குவரத்து ஆணையம், இரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியன ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும்.
இதனை தடுத்து நிறுத்த சட்டரீதியிலான முயற்சிகளை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தகைய ஆபத்துகளை தாண்டி தமிழக முதல்வருக்கு 2026 தேர்தல் தான் கண்களுக்கு தெரியும் என்பது தமிழகத்தின் துரதிர்ஷ்டமாகும்.
எனவே மிக அமைதியாக வாழும் நங்கநல்லூர், வேளச்சேரி, பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் உட்பட அப்பகுதி மக்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட இருக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலை மனதில் கொண்டு ஹஜ் விடுதி திட்டத்தை தமிழக அரசு கைவிட ஓங்கி குரல் கொடுத்து எதிர்ப்பு தெரிவிக்க முன்வருமாறு இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்




