திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

kadeswara subramaniam hindu munnani - 2026

திமுகவின் உள்நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அளித்த தீர்ப்பை திமுக அரசு அடாவடியாக செயல்படுத்தவில்லை. இதற்காக அரசியல் சாசனத்திற்கு எதிராக, அரசு அதிகாரிகளை செயல்பட வைத்தது திமுக செய்த தேச துரோகச் செயலாகும்.

அதேசமயம் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளனர்.

ஆனால் அங்கு கலவரத்தை உருவாக்க முயன்றவர்கள் யார்? திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் அங்கு கந்தூரி நடத்த ஆட்டை தோளில் போட்டு பிரச்சினை ஏற்படுத்தியவர்கள் திமுக கூட்டணியினர். அதற்கு உடந்தையாக இருந்தவர் திமுகவின் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது.

அவரைத் தொடர்ந்து இராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் நோக்கில் மலைமீது பிரியாணி கொண்டு போய் சாப்பிட்டு விட்டு எச்சிலை அங்கே போட்டதை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டார். திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் வாரிய சொத்து என்று பேட்டி அளித்தார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

எம்பி கனிமொழி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவரது கட்சியினரை கலவரம் செய்ய தூண்டி விட்டது உண்மை தானே.

முருக பக்தர்கள் மனதை புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் அறிவித்தது. அதற்கு 144 தடை உத்தரவு போட்டு தடுத்தது திமுக அரசு.

எல்லா தடைகளையும் சட்டரீதியாக உடைத்து முருக பக்தர்கள் மன உணர்வை வெளிப்படுத்தியது இந்து முன்னணி.அதன்பிறகு கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றபோது சட்டத்திற்கு புறம்பாக நடந்தது திமுக அரசு.

கோவிலுக்குச் சாதகமாக வந்த தீர்ப்புக்கு எதிராக வாதாட முருக பக்தர்களின் காணிக்கை நிதியை செலவு செய்தது எத்தகைய கொடுமை. இதனை வெட்கமே இல்லாமல் செய்தது திமுக அரசு.

இத்தனை சட்டவிரோதச் செயலுக்கும் காரணம் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்.

திமுகவின் நயவஞ்சகச் செயலை தமிழர்கள் புரிந்து கொண்டு ஜனநாயக வழியில் தேர்தலில் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories