அரசியல் கட்சி அறிவிப்பு! ரஜினி மக்கள் மன்றத்தினர் மகிழ்ச்சிப் பேரணி!

Published:

rajini-fans-in-madurai
rajini-fans-in-madurai

ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிக்க உள்ளதைக் கொண்டாடும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தினர் பேரணியாகச் சென்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் குறிப்பாக வருகிற டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைக் கொண்டாடும் விதமாக மதுரையிலுள்ள ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் எஸ் ஆர் இளங்கோ மணி தலைமையில் 50க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் மதுரை டிஎம் கோர்ட் பகுதியிலிருந்து பட்டாசு,வெடித்து மேளதாளங்களுடன் பேரணியாக சென்று மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் சாமி தரிசனத்திற்கு ஈடுபட்டனர்.

அப்போது வருகிற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரஜினிகாந்த் அவர்களை 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து அரியணையில் ஏற்றுவோம் எனவும் சூளுரைத்தனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img