மதுரையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வருகையால் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி (வடக்கு) மணிமாறன் (தெற்கு), முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் கூறியதாவது:மதுரையில் ஸ்டாலின் பங்கேற்கும் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ நாளை (செப்.,25) காலை அவனியாபுரத்தில்
துவங்குகிறது.

ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு செப்.,14ம் தேதியே போலீஸ் அனுமதி கேட்டுள்ளோம். மக்களை சந்திப்பதற்காகவே இப்பயணம். இதனால் செயல்வீரர்கள் கூட்டம் உட்பட கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம், திருமங்கலம், நக்கலக்கோட்டை, செக்கானுாரணி, சோழவந்தான், அலங்காநல்லுார், ஊமச்சிகுளம், வண்டியூர், ஒத்தக்கடை வழியாக மேலுாரில் முடிகிறது. பெண்கள்,மாணவர்கள், தொழிலாளர், விவசாயி உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து குறைகள் கேட்கிறார்.

நிர்வாகிகள், தொண்டர்கள் இடையூறு செய்யக்கூடாது. பயணத்திற்குஎவ்வித நெருக்கடியும் இல்லை. பிரச்னை ஏற்பட்டால் சமாளித்து பயணத்தை வெற்றி பெற செய்வோம், என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending