சுவாமி தயானந்த சரஸ்வதி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

Reporters Diary

பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதி (வயது 87) நேற்று நள்ளிரவில் காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், நேற்று காலையில் ரிஷிகேஷின் ஷீஷம்ஜாடியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு திரும்பினார். ஆனால், நள்ளிரவில் அவருக்கு மீணடும் உடல்நிலை மோசமடைந்து மரணம் அடைந்தார். அவரது மறைவு அவரது சீடர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவரது ஆன்மா நித்திய சமாதானத்தை அடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர் அறிவு, ஆன்மீகம் மற்றும் சேவை அடங்கிய சக்திப் பெட்டகம்” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அங்கு சென்றடைந்ததும் டுவிட்டர் மூலம் தயானந்த சரஸ்வதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.