தென்காசி தனி மாவட்டம் வேண்டாம்! நெல்லையே பெருமை! எழும்பும் போர்க் குரல்கள்!

Reporters Diary அடடே... அப்படியா? உரத்த சிந்தனை நெல்லை புகார் பெட்டி
tenkasi district - 2026

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசி தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று வெகுநாட்களாக சில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. குறிப்பாக, கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர், நபர்கள் பேரிலான மாவட்டங்கள் அமைக்கப் பெற்றபோது, தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு, வாஞ்சி மாவட்டம் அமைக்கப் பட வேண்டும் என்று குரல் எழுப்பப் பட்டது.

இந்நிலையில், தென்காசி தனி மாவட்டம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு வருவாய்த் துறை தரப்பில் இருந்து ஆட்சியருக்கு உத்தரவு அனுப்பப் பட்டது. இது குறித்த அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரிக்காதே… பல்வேறு வகையிலும் மன ரீதியான வகையிலும் ரத்த உறவுகளாலும் பின்னி பிணைக்கப்பட்டு ஒரே வீடாக வாழ்ந்து வரும் எங்களை மாவட்டத்தின் பெயரில் பிரிக்க வேண்டாம் என்று குரல் கொடுத்து வருகின்றனர் சிலர்.

அதற்குக் காரணம், தற்போதைய நெல்லை மாவட்டத்தில் நெல்லையை அடுத்து தென்காசிதான் இரண்டாவது பெரிய ஊர். ஆனால், தென்காசியில் அதற்கான அடிப்படை வசதிகள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மிகக் குறுகலான சாலைகள், பழைமையான ஊர்க் கட்டமைப்பு, இன்னமும் முழுமை பெறாத, பெரு வசதிகளற்ற அரசு மருத்துவமனை, தாமிரபரணி நதியின் உற்பத்தியும், நீர் ஆதாரப் பகுதிகளும் தென்காசி பகுதியையே சார்ந்திருக்கும் தன்மை, மாவட்டம் என்ற அளவுக்கு ஆவதற்கு குறைந்த அளவே உள்ள நிலப் பரப்பு என பல்வேறு காரணங்கள் அடுக்கப் படுகின்றன.

தென்காசி பகுதி நீர் வளமும் பாசனச் செழிப்பும் கொண்ட பகுதியாக மாறிவிடும் போது, நெல்லை மாவட்டத்தின் வருவாய் பெரும்பகுதி பாதிக்கப் படும் தன்மையும் கூட இத்தகைய எதிர்ப்புக்குக் காரணமாகத் திகழ்கிறது. தென்காசி பகுதியில் சில அமைப்புகள் தனிமாவட்டம் கோரும்போது, நெல்லை பகுதியினர் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தங்களின் போர்க்குரலை இவ்வாறு சிலர் எழுப்பி வருகின்றனர்….

மாவட்ட அளவில் மிகச் சிறந்த வகையில் தென்காசியில் இதுவரை அரசு மருத்துவமனை இல்லை,,.ஹைகிரவுண்டுக்கே இன்னும் படு சீரியஸான மருத்துவத்திற்கு கொண்டு செல்லும் நிலை….மேலும் தாமிரபரணி உற்பத்தி தென்காசி பகுதியை சார்ந்திருந்திருப்பதால் மாவட்டம் பிரிக்கப்பட்டால் நெல்லைக்கு தண்ணீர் கொடுப்பது குறைய வாய்ப்பு உள்ளது ..விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவர்,.. இது போன்ற பல்வேறு முறையில் இருநிலங்களும் ஒன்றையொன்று சார்ந்து பிண்ணிக் கிடக்கின்றது……………..

இதனால்
தேவையில்லை தென்காசி மாவட்டம் …
நாங்கள் நெல்லை மண்ணின் மைந்தர்களாகவே இருக்கின்றோம்…
????

  • சூரிய பாண்டியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.