ஆற்றை கடக்க முயன்றவரை அடித்து சென்ற வெள்ளம் ! பரபரப்பு வீடியோ !

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

rivar 1 - 2026கேரளா, கர்நாடகா மட்டுமின்றி வடமாநிலங்களையும் தென்மேற்கு பருவமழை  தீவிரமாக பெய்து வருகிறது. மகாராஷ்டிரா, அஸ்ஸாம், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கனமழையால் அங்கு ஓடும் ஆறுகளில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார்க்கில் பாயும் நதியிலும் கனமழையில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அங்குள்ள காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ராஜ்கார்க்கில் பாய்ந்தோடும் வெள்ளத்தை கடந்து ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு ஒருவர் நேற்று செல்ல முயன்றார். அவரை செல்ல வேண்டாம் என சுற்றியிருந்தவர்கள் எச்சரித்தும் அவர் கேட்காமல் தொடர்ந்து வெள்ளத்தில் நடந்து சென்றார்.

இதனால் அவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை காவல்துறையினர் இன்று மீட்டனர். இந்நிலையில் அவர் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அந்த காட்சியில் பொதுமக்கள் எச்சரிப்பதும், அவர் மீறி நடக்கும் போது ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதுமாக காட்சி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.