பட பூஜை : ஸ்டாலின் ! கதாநாயகன் : பரூக் அப்துல்லா ! இயக்குனர் ; வைகோ ! படம் : அண்ணா பிறந்தநாள்

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்

04 May24 vaiko - 2026செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழாவை மதிமுக சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளது. இதற்காக தொண்டர்களை  எல்லாம் அழைத்து  மிக பிரம்மாண்டமான மாநாடு நடத்தவும் வைகோ திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, சென்னை – நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 8.30 மணிக்குத் தொடங்குகிறது.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் வருகிறது. அந்த நாளை ஒர் மாபெரும் விழாவாக மிகவும் சிறப்பாக முழு நாள் மாநாடாக நடத்த உள்ளோம். மதிமுகவின் அரசியல் வரலாற்றிலே இது ஒரு முக்கியமான நிகழ்வாக  அமையப் போகிறது.anna - 2026இந்த கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் அமர்வதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட உள்ளது. 75,000 பேருக்கு பகலில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்க உள்ளோம். தொண்டர்களை பணம் கொடுத்து அழைத்து வரப்போவதில்லை. பிரியாணி வழங்கப்படாது, இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பரூக் அப்துல்லாவை அழைத்துள்ளேன். அவர் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 4ம் தேதி இரவு என்னிடம் பரூக் என்னிடம் பேசினார். . 5ம் தேதி காஷ்மீரை சிதைத்து விட்டார்கள். இந்த சமயத்தில் பரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள இயலமால் போய்விட்டது. அவரை வீட்டுக் காவலில் மத்திய அரசு வைத்துள்ளது.faruk - 2026பரூக் அப்துல்லாவை இந்த மாநாட்டுக்கு முன்னதாக மத்திய அரசு வெளியேற்றாவிட்டால் பரூக் அப்துல்லாவுடன் தொடர்பு கொண்டு அடிப்படை உரிமையை வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடச்செயவேன்.stalin jagan swearingin - 2026இதன் மூலம் பரூக் அப்துல்லாவை எப்படியாவது அழைத்துவருவேன். இந்த மாநாட்டின் கதாநாயகனாக பரூக் அப்துல்லா இருப்பார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.