வங்கிகளில் பணம் எடுக்க அலைய வேண்டாம் இனி..?

அடடே... அப்படியா? இந்தியா தமிழகம் தொழில்நுட்பம் பொது தகவல்கள்
MANI 2 2 - 2026

எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் இனிமேல் தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம் – தகவல் தொடர்புத்துறை மந்திரி.

தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1 கோடி தபால் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.

Athar 4 - 2026

தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

கடந்த மாதம் வரை தபால் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தபால் வங்கி சேவையை பெறும் நிலை இருந்தது.

ஆனால் தற்போது இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

அதாவது எந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் அவரது வங்கிக்கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால் அவர் இனிமேல் தபால் வங்கிகளில் அதாவது தபால் நிலையங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அங்கு பணம் எடுக்கலாம்.

indian post - 2026

இந்த புதிய வசதி கடந்த 1-ந்தேதி அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தை டெல்லியில் நேற்று நடைபெற்ற தபால் வங்கியின் ஓராண்டு நிறைவு விழாவில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர்பிரசாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.