பள்ளிகளில் தள்ளிப் போகும் காந்தி ஜயந்தி விழா!

Published:

mahatma gandhi - 2026

பள்ளிகளில் தள்ளிப் போயுள்ளது காந்தி ஜெயந்தி விழா. காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் அக்டோபர் 3-ஆம் தேதிக்கு பிறகு காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் காலாண்டு தேர்வுகள் முடிந்து இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் மூன்றாம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப் படுகின்றன. அதுவரை பள்ளிகளில் வகுப்புகள் இயங்காது ஆனால் நிர்வாகப் பணிகள் மட்டும் நடைபெற்று வரும்.

இந்நிலையில் காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை மத்திய அரசு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டு உள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தை நடத்த கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மீண்டும் திறந்ததும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் காந்தி ஜெயந்தி விழாவை நடத்த பள்ளிகள் அறிவுறுத்தப் பட்டுள்ளன. விடுமுறைகளில் காந்தியை ஓவியமாகவும் காந்தி குறித்த பொன்மொழிகள் காந்திஜியின் போராட்ட வாழ்க்கை குறித்து கட்டுரைகள் எழுதவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img