காந்திஜியின் இலட்சியங்கள் நமக்கு வழிகாட்டும் ஒளி: மோடி!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
ganthi - 2026

இன்று நாடு முழுவதும் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள்

கொண்டாடப்பட்டு வருகிறது அதே போல் இன்று நாட்டின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் 116வது பிறந்த நாளும் ஆகும். இவரின் பிறந்த நாளையும் நாடு கொண்டாடி வருகிறது.

காந்திஜி அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் “ஜெய் ஜவான் ஜய் கிஷாண்” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது

lal bhaguthur sastri 2 - 2026

பிரதமர் நரேந்திர மோடி தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்திலும், விஜய் காட்டில் அமைந்துள்ள நாட்டின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதையை செலுத்தி வணங்கினார்.

இவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து மற்றும் மரியாதையை பகிர்ந்துள்ளார்.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றில் காந்திஜியின் அர்ப்பணிப்பு மாறாமல் இருந்தது. ஏழைகளில் ஏழ்மையானவர்கள் அதிகாரம் பெறும் உலகத்தை அவர் கற்பனை செய்தார். என்றும், அவருடைய இலட்சியங்கள் நமக்கு வழிகாட்டும் ஒளி. என்றும் டிவிட் செய்துள்ளார்.

சாஸ்திரி ஜியின் மதிப்புமிக்க பங்களிப்பை இந்தியா ஒருபோதும் மறக்காது. அவர் தனது இலட்சியங்களிலிருந்தும் கொள்கைகளிலிருந்தும் ஒருபோதும் விலகாத ஒரு உறுதியானவர், என்று சாஸ்திரிஜிக்கும் ட்விட் செய்துள்ளார்.
அதனுடன், காந்திஜி, லால் பகதூர் சாஸ்திரியின் வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.