தமிழகம் செய்தது அசுர சாதனைதான்! ஆனால் கேரளத்தை மிஞ்ச முடியலியே!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
TASMAC - 2026

டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.

25-10-2019 = 100 கோடி, 26-10-2019 = 183 கோடி, 27-10-2019 = 172 கோடி ஆக மொத்தம் 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் இந்த மூன்று தினங்களில் விற்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 325 கோடி ரூபாய் விற்ற நிலையில் இந்த வருடம் 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று சாதனை!

கேரளாவின் ஓணம் பண்டிகையில் 3 நாட்களில் சாராய வியாபாரம் 490 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையானது. இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளி 3 நாட்கள் சாராய விற்பனை 455 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை ஆகியுள்ளது.

தமிழகம் முதலிடம் பிடிக்க முடியாவிட்டாலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.130 கோடி அதிகமாக விற்பனை ஆகியுள்ளது என்பது “குடிமகன்களுக்கு ஒரு கௌரவமான செய்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.