வைகைக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் மதுரை
26 June27 Vaigai dam - 2026

வைகை அணை நீர்மட்டம் டிச.3 இன்று பிற்பகல் 1 மணிக்கு 66 அடியாக உயர்ந்தது. இதை அடுத்து, அணையில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணையின் உயரம் 71 அடி. பிற்பகல் 1 மணிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4008 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 360 கன அடி நீர் வெளியேறுகிறது!

இதை அடுத்து, தேனி, மதுரை மாவட்ட வைகைக் கரையோர பகுதிகளில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால், வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதை அடுத்து, கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது போல், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.