துரத்தி அடிக்கப்பட்ட ஜெர்மன் மாணவர் காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்.!

Published:

jermen sutened - 2026

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

அதில் சென்னை ஐஐடி-யில் பயின்ற ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் மாணவன் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல்வாதிகள் சார்பாக போராட்டகள் நடந்து வருகிறது.

அதில் சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் என்ற மாணவன் சென்னை ஐஐடி-யில் இயற்பியல் முதுகலை பட்டம் பயின்று வந்தார்.

கடந்த நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

அந்த போராட்டத்தில் பங்குபெற்று அவரது எதிர்ப்பை தெரிவித்தார்.

இதனால் அதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் ஜேக்கப் மாணவனை இந்தியாவில் தங்கி படிப்பதற்கான தகுதியை ரத்து செய்தனர்.

jerman susu 3 - 2026

இந்நிலையில் ஐஐடி-யில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவனை ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார் என தெரிய வந்தது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இதுகுறித்து தி பெட்ரலுக்கு தொடர்புகொண்ட ஜேக்கப், குடியுரிமை அதிகாரிகள் என்னை அழைத்து விசாரணை நடத்தினர்.

அதில் ஏன் போராட்டத்தில் கலந்துகொண்டிங்க என கேள்வி கேட்டனர். அப்போதான் தெரிந்தது நான் கடுமையான விசாரணை வளையத்துக்குள் சிக்கிக்கொண்டேன் என, புரிந்து கொண்டார்.

பின்னர், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டம் சரியான அனுமதியின்றி நடத்தப்பட்டதா என தெரிவித்தனர்.

மேலும், மாணவர் விசாவில் வந்துருக்கும் நீங்கள் படிக்க மட்டுமே அனுமதி, போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டனர்.

பின்னர் இந்த போராட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டது என எனக்கு அப்போதுதான் தெரியும்,

மாணவர் விசாவில் வந்த நான் படிப்பில் மட்டும் கவனம் செலுத்திருக்க வேண்டும்.

வேறு எந்தவொரு நடவெடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்க கூடாது என நான் புரிந்துகொண்டேன்.

பிறகு நீண்ட நேரம் பேசிய அதிகாரிகள் என்னை இந்தியாவை விட்டு வெளியேற சொன்னார்கள்.

நான் என் மன்னிப்பையும், என்னோடைய வருத்தத்தையும் தெரிவித்தேன்.

ஆனால் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்தனர் என தெரிவித்துள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

மேலும் ஒரு செமஸ்டர் மட்டும் இந்தியாவில் படித்த ஜேக்கப், மீதியுள்ள படிப்பை அவரது நாட்டில் தொடருவார் என தெரிகிறது.

Related articles

Recent articles

spot_img