நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்று… நாற்பது தையல் முகத்தில்..! வைரலான படங்களால் அதிர்ச்சி!

Published:

selfie with dog girl1 - 2026
நாய் கூட #செல்பி எடுக்க போய் அழகான முகத்துல நாற்பது தையல் போடும்படியா ஆய்டுச்சி

நாயுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை நாய் கடித்து, வாயை பஞ்சராக்கிய பயங்கரம்! அப்பெண்ணுக்கு நாற்பது தையல் போட்ட சம்பவம்.. வைரலாகும் செய்தி.. விழிப்பு உணர்வை ஊட்டும் செய்தியானது.

செல்பி மோகத்தால் நிகழ்த சோகம் இது. நாய் கடித்து நாற்பது தையல் போட்ட சம்பவம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய இளைஞர்கள் செல்ல பிராணி வளர்ப்பில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் இதில் அதிகம். செல்லப் பிராணிகளை வளர்த்து அதனுடன் செல்பி எடுத்துப் போடுவதில் இளம் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். இதில் அவர்கள் இந்த செல்ல பிராணிகளால் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

selfie with dog girl - 2026
நாய் கூட #செல்பி எடுக்க போய் அழகான முகத்துல நாற்பது தையல் போடும்படியா ஆய்டுச்சி

இந்நிலையில் அர்ஜென்டினாவில் இதுபோன்ற சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த லாரா ஜான்சன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழிக்கு சொந்தமான ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் அவரது முகத்தில் கொடூரமாகக் கடித்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் ஊசி நரம்பு கொண்டு சுமார் 40 தையல்கள் போடப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரம் செல்லபிராணி வளர்க்கும் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியையும் ஒரு எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படங்கள் சமூகத் தளங்களில் வைரலாகி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது. செல்ல பிராணிகளுடன் எச்சரிக்கையாக பழக வேண்டும் என்றும், இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img