மதுரையில்… மலிவு விலையில் காலிஃப்ளவர் விற்பனை!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
cabbage madurai
cabbage madurai

மதுரை: மதுரை நகரில் வரத்து அதிகரிப்பால் ரூ. 20..க்கு விற்ற காலிபிளவர் பூ கோசானது, ரூ. 10, ரூ. 5..க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ஒருநேரத்தில் காலிபிளவர், சோயா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் வகைகளை நடுத்தர, ஏழை மக்களோ, வாங்கி உண்ண முடியாத நிலை இருந்தது. காலப்போக்கில் இந்த வகைகளின் வரத்து அதிகரிப்பால், பூகோசை, அனைத்து தரப்பட்ட மக்களும் விலை குறைவால் வாங்கி உண்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சில்லரை வியாபாரி சுப்ரமணி கூறியபோது.. கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது.அதனால், குறைவான விலைக்கு பூ கோசுவை ரூ. 10..க்கு விற்பனை செய்ய முடிகிறது. பீன்ஸ் விலை கிலோ ரூ. 80 வரையிலும், கத்தரிக்காய் ரூ. 40..க்கும் விற்பணை செய்யப்படுகிறது என்றார்.

கொரோனாவுக்கு பிறகு மளிகை சாமான்கள், காய்கறி விலைகள் நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லையென பொதுமக்ககள் தெரிவித்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.