பாலாற்றை பாதுகாக்க கருவேல மரங்­கள் அகற்­றம்: வேலூர் ஆட்­சியர் உறுதி!

Published:

vellore collector meeting
vellore collector meeting

வேலூர் பகுதியில் பாலாற்றை பாதுகாப்­ப­தற்­காக கரு­வேல மரங்­களை அகற்றும் திட்­டத்திற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் தீவிர நட­வடிக்கை எடுத்து வருகிறார்

வேலூர் மக்­க­ளின் நீராதா­ரமாக விளங்­குகிறது பாலாறு. கர்­நா­டக மற்றும் ஆந்திர மாநிலங்­க­ளில் இருந்து இந்தஆற்றில் தண்ணீர் வருகிறது. இதனு­டன் 6 துணை ஆறுகளும் சேர்­கின்­றன. இந்த பாலாறால் வேலூர் பகுதியில் ஒரு லட்­சத்து 10 ஆயிரத்து 600 ஏக்­கர் விவ­சாய நிலங்­கள் பய­ன­டைகின்­றன.

வேலூரை கடந்து காஞ்சிபுரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­க­ளுக்குச் சென்று சுமார் 222 கிலோ மீட்­டர் வரை இந்த பாலாறு செல்கி­றது. இதில் வேலூர் மாவட்டத்தில் மட்­டும் 62.5 கிலோ மீட்­டர் ஓடுகிறது. இந்த பாலாறால் மோர்­தானாஅணை, பசளப்­பள்ளிஅணை, ராஜாதோப்புஅணை உள்ளிட்ட பல்­வேறு அணை­கள் நிரம்புகின்­றன.

வேலூர், அணைக்­கட்டு, காட்­பாடி, கே.வி.குப்­பம், குடியாத்­தம், பேரணாம்­
பட்டு உள்ளிட்ட ஆறு தாலு­காக்­கள் மற்றும் 61 கிராமங்களில் இந்த பாலாறு ஓடுகிறது. கர்­நா­ட­காவில் கட்­டப்­ பட்­டுள்ள தடுப்­ப­ணை­க­ளால் பாலாற்றில் தண்­ணீர்வரத்து குறைந்துள்­ளது. அதிக மழை பெய்த காலத்­தில் மட்­டுமே இதில் தண்ணீர் வரும் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.

கருவேலமரம் இந்நி­லை­யில் பாலாற்றை பாதுகாப்­போம் என்ற திட்­டத்தை வேலூர் மாவட்ட நிர்­வா­கம் அறிமு­கப்­ப­டுத்தியுள்­ளது. இதன் மூலம் பாலாற்றை
ஒட்­டியுள்ள கரு­வேல மரங்களை அகற்றுவதற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக 300 ஜே.சி. பி.க்கள் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. ஒட்­டியுள்ள கால்­வாய்­க
ளும் தூர்­வா­ரப்­பட்டு, சுமார்ஒரு லட்­சத்திற்கும் மேலான மரக்கன்றுகள் நடப்­பட உள்­ளன.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

நாளை முதல் அடுத்த 5 நாட்­க­ளுக்குள் இந்த பணி­களைமுடிப்­ப­தற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் உத்­த­ரவிட்­டுள்­ளார். வெட்­டப்­ப­டும் கரு­வேல மரங்­கள் அனைத்தும் அந்­தந்த பகுதிகளில் வைத்து மொத்­த­மாக எரிக்­கப்­ப­டும். இந்­தத்
திட்­டத்­தால் மணல் கொள்ளை தடுக்­கப்­ப­டும். நீர் வளம் அதிகரிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி அடை­வர்

  • சுரேஷ்குமார்

Related articles

Recent articles

spot_img