களத்தில் இறங்கிய கலெக்டர்; நேரடி ஆய்வால் குறையுமா கொரோனா?

அடடே... அப்படியா? கோவை லைஃப் ஸ்டைல்
krishnagiri
krishnagiri

கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்ட எல்லையான சப்பானிபட்டியில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் ஆய்வு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கட்டுபாடுகளை தீவிரபடுத்தி உள்ளனர். நேற்று இரவு முதல் மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதும் உள்ள எல்லை பகுதிகள், கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்பொழுது 22 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இ பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.!  அனைத்து எல்லை பகுதிகளும் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டு உள்ளதால் கொரோனா தாக்கம் விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.