மருந்துக் கடைகளில் பாராசிடமால் கிடைப்பதில்லை! புகாருக்கு நீதிமன்றம் கேள்வி!

Published:

madurai-people
madurai-people
  • மதுரை மாவட்டத்தில் மருந்து கடைகளில் பாரசிட்டமால், காப் சிராப் கிடைப்பதில்லை
  • மருத்துவர் சீட்டு வேண்டுமாம்
  • மருந்து கடைக்காரர்கள் கைவிரிப்பு
  • நீதிமன்றம் மாத்திரை கிடைப்பதை உறுதி செய்ய வற்புறுத்தல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் பாரசிட்டமால், கால்பால் உள்ளிட்ட பாராசிடமால் வகை மருந்துகள் மற்றும் காப்சிராப் ஆகியவை மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து கடைக்காரர்கள் வழங்க தயங்குவதுடன், மாத்திரைகள் தற்போது இருப்பில்லை என கடந்த சில மாதங்களாகவே கூறி வருகின்றனர்.

madurai highcourt branch
madurai highcourt branch

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் பல இன்னமும் அடைக்கப் பட்டிருப்பதால், மக்கள் அரசு மருத்துவமனைகளையே நாடவேண்டி உள்ளது.
கொரோனா பயம் உள்ளதால், மக்கள் பலர் அரசு மருத்துவமனைக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆகவே, மதுரை மாவட்ட நிர்வாகம் எப்போதும் போல, மருந்துக் கடைகளில் பாரசிட்டமால், கால்பால், டோலபர், காப் சிரப் விற்க அனுமதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகின்றனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இந்த நிலையில் பொதுமக்கள் பலர் சித்தா மருந்தகங்களில் உள்ள துளசி, ஆடாதோடை, மற்றும் கடுக்காய் பொடி, அதிமதுரம் போன்ற மருந்துகளை வாங்கத் தொடங்கி யுள்ளனர். அலோபதியிலிருந்து மக்கள் பலர் சித்தா மற்றும் ஆயூர்வேதத்துக்கு மாற தொடங்கியுள்ளனர்.

அரசு, கடைகளில் பாராசிட்டமால், கால்பால் கிடைக்க துரித நடவடிக்கையை பொது மக்கள் எதிர்பார்கின்றனர்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று… பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என, தமிழக அரசு வாதிட்டது. அதற்கு பதில் அளித்த நீதிமன்றம் பாரசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக் கோரிய வழக்கில், அரசு பதிலளித்ததைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறியது. ஆனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ஆட்சியர்களின் கையொப்பமிட்டு, பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகள் மருத்துவரின் பரிதுரை இன்று கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர்களின் செல்போன் எண் பெற்றுக் கொண்டு அரசுக்குத் தெரிவித்த வேண்டும் என்று கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டிருந்தன.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

இந்நிலையில், அவ்வாறெல்லாம் அரசு சொல்லவில்லை என்று தடாலடியாக தமிழக அரசு நீதிமன்றத்தில் சொல்லிவிட்டது.

பாராசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில், அரசு இவ்வாறு பதிலளித்ததை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img