தெலுங்கு உலக அழகியாக மகுடம் சூடிய விஜயவாடா பெண்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
telugu miss - 2026

தெலுங்கு உலக அழகியாக, விஸ்வசுந்தரியாக மகுடம் சூடினார் விஜயவாடா பெண்!

விஜயவாடாவைச் சேர்ந்த இளம்பெண் தெலுங்கு விஸ்வ சுந்தரியாக மகுடம் சூட்டியுள்ளார். டிகிரி படித்துக்கொண்டே மாடலாக புகழ் பெற வேண்டும் என்ற இலக்கோடு போட்டிபோட்டு மிகவும் சிறப்பான ஒரு கௌரவத்தைப் பெற்றுள்ளார். தெலுங்கு கல்சுரல் ஃபெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்று வெற்றியாளராக நின்றுள்ளார்.

கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவை சேர்ந்த பி.நாகதுர்கா குசுமசாயி கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார். நாட்டியம், நாடகம் போன்ற துறைகளிலும் பயிற்சி பெற்று வருகிறார்.

தெலுகு அசோசியேஷன் ஆஃப் நார்த் அமெரிக்கா (TANA) மற்றும் பிற தெலுங்கு அமைப்புகள் சேர்ந்து ஆன்லைன் வேர்ல்டு தெலுங்கு கல்ச்சுரல் ஃபெஸ்ட் 2020 போட்டிகளை நடத்தியது. அதில் பங்குகொண்ட நாகதுர்கா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

போட்டியில் இளம் பெண்கள் 600 பேர் பங்கு பெற்றனர். அனைத்து சுற்றுகளையும் முடித்து இறுதியில் நாகதுர்கா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் தெலுகு அசோசியேஷன் ஆஃப் நார்த் அமெரிக்கா நடத்திய ஆன்லைன் வேர்ல்ட் தெலுகு கல்சரல் ஃபெஸ்ட் 2020 போட்டியில் வென்று தெலுங்கு விஸ்வ சுந்தரியாக மகுடம் சூடியுள்ளார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

போட்டியில் 600 பேரோடு போட்டியிட்டு முதல் பரிசை வென்றுள்ளது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெலுங்கு விஸ்வ சுந்தரியாக அரிதான கவுரவம் கிடைத்தது ஆனந்தமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.