3 மாதமாக மூடிக் கிடந்த டெக்ஸ்டைல் மில்லில் பயங்கர தீ!

Published:

fire textile mills madurai - 2026
  • மதுரை அருகே டெக்ஸ்டைல் மில்லில்
    பயங்கர தீ
  • தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.

மதுரை அருகே விளாங்குடியில் தனியாருக்குச் சொந்தமான செல்வராஜ் டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் என்னும் நூற்பாலையில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

fire textile mills madurai1 - 2026

இந்த நூற்பாலை அருகே அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பெட்ரோல் பங்க் போன்றவை உள்ளதால் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்..

fire textile mills madurai2 - 2026

இந்த நூற்பாலை கடந்த மூன்று மாத காலமாக மூடி கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கு எப்படி தீப்பிடித்து என கூடல்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

fire textile mills madurai3 - 2026

விரைந்து வந்து தீயை அணைத்த மதுரை தீயணைப்பு துறை மாவட்ட நிலைய அலுவலர் கல்யாணகுமார் மற்றும் மதுரை டவுன் நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான மதுரை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது..

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img