ஐஏஎஸ் தேர்வு: பிரபல நடிகரின் மகன் 75 வது இடம்!

அடடே... அப்படியா? கல்வி சினிமா தமிழகம் லைஃப் ஸ்டைல்
chinni jeyanth - 2026

இந்திய குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் ஹரியானா மாநிலத்தினை சேர்ந்த பிரதீப் சிங் என்பவர் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழக அளவில் கணேஷ்குமார் என்பவர் முதலிடம் பிடித்தார்.

chinni jeyanth son - 2026

இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் அகில இந்திய அளிவில் 75ஆவது இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் வாழ்க்கையில் என்னாவாக வேண்டுமென தனக்கு பெற்றோர் முழு சுதந்திரம் அளித்ததாகவும், கல்வி, சுற்றுச்சூழல், தொழில்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.