கொரோனா: மருத்துவமனையில் சேர்ந்த 30 நிமிடத்தில் பெண் மரணம்! மருத்துவரின் கன்னத்தில் அறைந்த இளைஞர்!

அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
selam-hospital

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 50 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தீவிர தொற்றுடன் சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், வந்த அரைமணி நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அந்த பெண்ணுடன் வந்த அவரது உறவினரான இளைஞர், சிகிச்சை அளித்த மருத்துவரிடம், உரிய சிகிச்சை அளிக்கவில்லை, அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், திடீரென மருத்துவர் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.

இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.