5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி!

உள்ளூர் செய்திகள் கல்வி கோவை சற்றுமுன்

sengottaian - 2026

ஈரோடு: 5,8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு ஆண்டில் பொதுத் தேர்வு நடத்தப் பட மாட்டாது என்று கூறினார் அமைச்சர் செங்கோட்டையன்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போது,  தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது.  எனவே, பொதுத்தேர்வு குறித்து வரும் செய்திகளால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இந்தப் பொதுத் தேர்வுகளை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து தமிழக அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.