2 தலை 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி! காணக் குவியும் கூட்டம்!

Published:

Calf
Calf

2 தலை, 4 கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி: ராஜஸ்தானில் பரபரப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி ஒன்று இன்று பிறந்துள்ள்தால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அவ்வப்போது பசுமாடு வித்தியாசமான கன்று குட்டிகளை ஈன்று வருவது குறித்த செய்தியை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வளர்த்து வந்த பசு சமீபத்தில் கர்ப்பம் அடைந்தது. இந்த நிலையில் அந்த பசுவுக்கு கன்று குட்டி பிறந்த நிலையில் அந்த கன்று குட்டி இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் கூடிய அதிசய கன்றுக்குட்டி ஆக இருப்பதை பார்த்து விவசாய ஆச்சரியமடைந்தார்

இதுகுறித்த தகவல் அந்த பகுதியில் பரவியவுடன் ஏராளமானோர் அந்த அதிசய கன்றுக்குட்டியை பார்க்க வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியபோது இரண்டு தலை நான்கு கண்களுடன் உள்ள கன்று குட்டி தற்போது வரை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கன்றுக்குட்டியை பார்க்க கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

Related articles

Recent articles

spot_img