December 5, 2025, 6:44 PM
26.7 C
Chennai

திருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே..! அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை!

vainava valluvar dhinam oru thirukkural

திருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே..! திருவள்ளுவர் ஓர் இந்து ஆன்மிகப் பெருந்தகையே… அதனால்தான்… ஆலயங்களில் திருக்குறளை ஓத வேண்டும் என்று திமுக., அரசு கட்டளை பிறப்பித்துள்ளது.

திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என திமுக., அரசின் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

ஆக. 31 ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை- மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள் இவை…

  1. ‘தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில், ஊடகங்கள் வாயிலாக தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்கென சிறப்பு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  2. அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க ‘தமிழ் பரப்புரைக் கழகம்’ உருவாக்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  3. பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ‘திறனறித் தேர்வு’ நடத்தி ஆண்டுதோறும் 1,500 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டாண்டு களுக்கு ஊக்கத் தொகையாக மாதம்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும்.
  4. திருக்குறள் முற்றோதல் செய்து பரிசுத் தொகை வழங்காமல் நிலுவையில் உள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு குறள் பரிசு வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டு பரிசுத் தொகை உயர்த்தப்படும்.
  5. தமிழ் அறிஞர்கள் சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம் மற்றும் புலவர் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டு, பரிவுத் தொகை வழங்கப்படும்.
  6. சங்க இலக்கிய வாழ்வியல், ஓவியங்களாகவும், எளிய விளக்கத்துடனும் காஃபி மேசைப் புத்தகமாக வெளியிடப்படும். இதற்கென ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  7. திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்.
  8. தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்திட ரூபாய் 15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
  9. புகழ்பெற்ற தலைவர்கள், தமிழறிஞர்களின் ஒலி/ ஒளிப்பொழிவுகள் ஆவணமாக்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  10. சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு நூல்களாக அச்சிட்டுக் குறைந்த விலையில் வெளியிட ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  11. தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்.
  12. வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுகள் தமிழிலும் அச்சிட்டு வழங்கப்படவும், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குத் தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படவும் வழிமுறைகள் உருவாக்கப்படும்.
  13. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பெறப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுத் தொகுப்புகள் தமிழில் தொகுத்துத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வயிலாக இணையத்தில் வெளியிடப்படும்.
  14. பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் ஒலி நூல்களாக வெளியிட ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.
  15. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் கீழ், புதிய கலைச்சொற்கள் உருவாக்கம் இணைய வழியில் அறிமுகம். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்.
  16. தொல்காப்பியம் முதல் முத்தொள்ளாயிரம் வரையிலான 41 செவ்வியல் நூல்கள் எளிதாகவும் ஒரே இடத்தில் தொகுப்பாகவும் கிடைக்கப் பெற வழிவகை செய்யப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.
  17. நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 81 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படும்.
  18. தமிழைப் பிறமொழியினருக்குக் கற்பிக்கும் வகையில் திராவிட மொழிகள் உட்பட பிற மொழிகளில் பாட நூல்களும், பன்மொழி அகராதியுடன் தமிழ் கற்பிக்கும் குறுஞ் செயலிகளும் உருவாக்கப்படும்.
  19. சொற்குவையின் சொற்கள், தமிழ் மின் நூல்கள், அரசுத் தளங்களின் உள்ளடக்கங்கள் போன்றவை படைப்பாக்கப் பொது உரிமத்தில் வெளியிடப்படும்.
  20. ஆட்சிச் சொல் அகராதி திருத்திய பதிப்பு மற்றும் அரசுத் துறைகளின் புதிய கலைச்சொற்கள் தொகுத்து வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பு தற்போது, சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, இந்து சமய ஆன்மிக நூல் என்று திருக்குறளை அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருந்தால் மட்டுமே, இந்து சமய ஆலயங்களில் அதனை ஓதுவதற்கு அரசு பரிந்துரை செய்தாக முடியும். அல்லது, இந்து சமய ஆலயங்களில் இந்து சமயமல்லாத நூலை வலியத் திணித்தால், அது சமயங்களில் மதசார்பற்ற அரசு குறுக்கீடு செய்வதாகவே அமையும்.

thiruvalluvar deivapulavar
thiruvalluvar deivapulavar

ஒருவேளை திருக்குறளை அரசு இந்து சமய நூல் என்று கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருந்தால், திருவள்ளுவருக்கு காவி உடை வைத்து வரைந்திருப்பது கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதாகவே இருக்க முடியும். காரணம், இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் (குறிப்பாக துறவிகள்) காவி உடை தரித்திருப்பது மரபு. திருவள்ளுவர் துறவியா அல்லது, இந்து சமயத்தைச் சேர்ந்த இல்லறத்தாரா என்பது ஒரு புறம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டாலும் கூட, காவி உடை தரித்தல் எவராயினும் ஏற்கப் படுவதுண்டு. காவி மட்டுமே துறவுக்கு இலக்கணமல்ல, மேலும் சில உண்டு. ஆனால், காவி உடை தரித்திருந்தாலே துறவி என்று ஆகிவிடாது.

எனவே பாஜக., அரசியல் ரீதியாக கடந்த காலங்களில் திருவள்ளுவருக்கு காவி உடை வரைந்து வெளியிட்டது திமுக., அரசாலும் ஏற்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அன்றைய திமுக., சார்பில் திருவள்ளுவருக்கு பூணூல் மறைத்து, வெள்ளுடை தரித்து, வெண்ணீறு அழித்து போடப்பட்ட உருவப் படம், தவறானது, சட்ட விரோதமானது, மத விவகாரங்களில் தலையீடு செய்யப் பட்டிருப்பது என்பதை, இன்றைய திமுக., ஒப்புக் கொண்டிருப்பதாகவே கருத இடமுண்டு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories