கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாயம்! ஆயுர்வேத மருத்துவரின் அறிவுறுத்தல்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
kowthaman

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயத்தை குடிக்குமாறு ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கவுதமன் அறிவுறுத்தியுள்ளார்.

டாக்டர் கவுதமன் சான்றளிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். Healing சிகிச்சையில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்.

இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் தலைமை மருத்துவ இயக்குநராக பணியாற்றி வருகிறார். .

இந்த நோயை எப்படி தடுப்பது, வந்துவிட்டது எப்படி குணமாக்குவது? வந்து போய்விட்டது , மீண்டும் ஏற்படாமல் எப்படி தடுப்பது? கொரோனா நோய் வந்த பிறகு உடல்நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது. இதை நாம் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் உடலில் எந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் நோயை பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த நோய் வந்துவிட்டால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நமது ஆற்றலை பயன்படுத்த வேண்டும். ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கிறார்கள்.

அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மற்ற 3பேருக்கும் சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பே இல்லை. இது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு உடலிலும் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது நமக்கு உதவி செய்யக் கூடிய மிகப் பெரிய காரணியாக இருக்கிறது.

kowthaman-dr

நம் வீட்டிலிருந்த படியே நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது? இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கசாயம் உள்ளது. இதை தயார் செய்வது மிகவும் சுலபமான ஒன்று. இதை செய்ய தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

கடுகுரோகிணி
கீழாநெல்லி
கொழிஞ்சி
கரிசாலை
ஆடாதோடை
சீந்தில் கொடி
கடுக்காய்
தான்றிக்காய்
நெல்லிக்காய்
வேப்பம்பட்டை
மூக்கிரட்டை
திப்பிலி
300 மில்லி தண்ணீர்

இந்த மூலிகைகளை 3 கிராம் எடுத்துக் கொண்டு 300 மி.லி தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 100 மில்லியாகும் போது அடுப்பை அணைத்துவிட்டு அதை வடிகட்டி, தேவைப்பட்டால் தேனோ, பனங்கற்கண்டோ சேர்த்து இந்த கசாயத்தை காலையும் இரவும் உணவுக்கு முன்பு எடுத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.