‘திராவிட ஆட்சியின் நவீன திருட்டு’: கோயில் நிலம் கோயிலுக்கே! போராடும் மக்கள்!

temple-land-is-for-temple-public-protest
temple-land-is-for-temple-public-protest

திருப்பூர் , ஆண்டிபாளையத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமார் 200 வருடங்கள் பழமையானது.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 12 ஏக்கர் ( 11.6 ஏக்கர் ) நிலம் உள்ளது . இந்த நிலம் 12 ஏக்கரில் முன்பு அரசால் கையகப்படுத்தப்பட்டது , இடையில் செல்லும் சாலைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது போக எஞ்சியிருப்பது சுமார் ஒன்பது ஏக்கர் மட்டுமே …

இந்த ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அறநிலையத்துறை வேறு ஒரு அரசுத் துறைக்கு விற்றுவிட்டதாக அந்த கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது! இதுதொடர்பாக அவர்கள் பல முறை அறநிலையத்துறையிடம் விவரம் கேட்டும் சரியான பதில் அளிக்கப்படவில்லை!

கடும் முயற்சிகளுக்குப் பிறகு அந்த இடம் காவல் துறைக்கு அறநிலையத் துறையால் விற்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்தது! இதையடுத்து வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரிவிதித்து , அந்த இடத்தைச்சுற்றி கிராம மக்களே கம்பி வேலி அமைத்து , இது கோயிலுக்குச்சொந்தமான இடம் என்ற அறிவிப்புப் பலகையும் வைத்தனர்!

இந்நிலையில் சுமார் 10 தினங்களுக்கு முன்பாக காவல் துறை சார்பாக திடீரென அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு , பொதுமக்கள் வைத்திருந்த அறிவிப்புப்பலகையும் அகற்றப்பட்டது!

அதையடுத்து கமிஷனர் தலைமையில் அந்த வளாகத்தை சுற்றி மரங்கள் நடப்பட்டன! போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அங்கு காவலர் குடியிருப்பு கட்டப்பட உள்ளது…

மிகவும் பிரபலமான அந்தக் கோயில் பொங்கல் விழாவுக்கு வருடந்தோறும் சுமார் லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்… அத்தனைபேரும் பொங்கல் வைத்து வழிபடவும் இதர வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவும் எஞ்சி இருப்பது அந்த 9 ஏக்கர் நிலம் தான்.

கோயில் நிலத்தை மீட்கு முயற்சியில் இன்று காலை அப்பகுதி மக்கள் திருப்பூர் மங்கலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்ட பிறகு ஓடி வந்த அதிகாரிகள் மக்களை மறியலை கைவிட வற்புறுத்தியுள்ளனர்!

அப்போது அங்கு வந்த அறநிலையத்துறை அதிகாரி இந்த இடம் காவல்துறைக்கு ரூபாய் 5.5 கோடிக்கு விற்கப்பட்டு விட்டதாகவும் , 3 கோடி ரூபாய் அறநிலையத்துறைக்கு வரவு வைக்கப்பட்டதாகவும் இன்னும் இரண்டு கோடி ரூபாய் வர வேண்டி இருக்கிறது என்றும் தகவல் சொல்லி உள்ளார்!

இது என்ன நியாயம் ? வேலியே பயிரை மேய்ந்தால் யார் என்ன செய்வது? அறநிலையத் துறை என்பது கோவில்களை பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பா அல்லது கோயில் நிலங்களை விற்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பா ?

இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தைத் தந்தது ? கோயில் நிலங்களின் பொறுப்பாளராக அந்ததந்தக் கோயிலின் மூர்த்தி உள்ள நிலையில் கோயில் நிலத்தை விற்க அறநிலையத்துறைக்கு ஏது அதிகாரம் ?

நான் பல வருடங்களாக இதைப்பற்றி எழுதி வருகிறேன்… திருப்பூரில் தொடர்ந்து கோவில் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள் கோர்ட்டில் பெரும்பாலும் கோயில் நிலைகளில் அமைந்தவை தான்!

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எஸ்பி அலுவலகம் , ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இவை அனைத்துமே திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் அமைந்துள்ளன!

தற்போது நல்லூரில் அமைந்துள்ள கிளைச் சிறை வளாகமும் இன்னும் பல அரசு அலுவலகங்களும் தொடர்ந்து கோவில் நிலங்களிலேயே கட்டப்பட்டு வருகின்றன! இந்த கோயில் நிலங்களை எல்லாம் எடுத்துக் கொள்வதற்கு என்ன கணக்கு? இத்தனை நிலங்களை எடுத்தாலும் எந்தக் கோவிலுக்கும் பணம் வந்து சேர்வதும் இல்லை.

எல்லா கோயில் செலவுகளுக்கும் திருப்பணிகளுக்கும் அ.நி.துறை மக்களிடம் பிச்சை எடுக்கிறது! ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலும் அரசால் சூறையாடப்பட்டும் வரும் நிலையில் எஞ்சியுள்ள கோயில் பூமிகளையும் அரசே திட்டமிட்டு அபகரித்தால் மக்கள் யாரிடம் போய்ச் சொல்லி அழ.?

நீதி வழங்க வேண்டிய நீதிமன்றங்களே கோயில் நிலத்தில் அமைந்திருக்கும் போது, நீதிமன்றம் எப்படி நல்ல தீர்ப்பை அளிக்கும்?!

இந்த விவகாரம் தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தாசில்தார் அறிவித்துள்ளார்! கோயில் நிலத்தை மீட்கும் வரை கிராம மக்கள் தொடர்ந்து போராட உள்ளனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories