குட்டி யானை ஒன்று புட்டிப்பால் குடிக்கும் காட்சி! வைரல் வீடியோ!

Published:

elephant

குட்டி யானை ஒன்று புட்டியில் இருந்து பால் குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையின் டிவிட்டர் பக்கத்தில் 18 விநாடிகள் கொண்ட கிளிப்பைப் பகிரப்பட்டு இருந்தது. அந்த சிறிய வீடியோவில், கியாசா என்ற குட்டி யானை ஒன்று, பால் குடிப்பதற்காக பயன்படுத்தப்படும் புட்டியில் இருந்து பால் குடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்த பராமரிப்பாளர், குட்டி யானையிடம் பால் புட்டியை கொடுக்கிறார். அந்த யானை அந்த புட்டியை வாயை விட்டு வெளியே எடுக்காமல் ஒரே நேரத்தில் பாலை குடித்து முடித்து விட்டது. அந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலர் அந்த யானையைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

தாய் தந்தை இல்லாத யானை கியாசா கேமராவுக்கு முன்னால் பால் குடிக்கிறாள். சமீபத்தில் பாட்டிலில் உள்ள பாலை மின்னல் வேகத்தில் குடித்து முடித்தாள்” என குறிப்பிடப்பட்டு அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை இதுவரை 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பர்வைகளைப் பெற்றுள்ளது. அதே போல, 700 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. பலர் அந்த யானையின் மீதுள்ள அன்பை கமெண்டில் வெளிப்படுத்திவருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, குட்டி யானை ஒன்று அங்குமிங்கும் ஓடி வாழைத் தாருடன் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை தற்போதுவரை 84 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img