நீட் தேர்வு பயத்தில் மதுரை மாணவி தூக்கிட்டு தற்கொலை!

அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
suicide
suicide

மதுரை: மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர் முருகசுந்தரத்தின் மகள்- ஜோதி துர்கா (வயது 19). இவர், நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக இன்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாளை நடக்க உள்ள தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த நிலையில், ஜோதி துர்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப் படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

நாளை தேர்வு நடக்க உள்ள நிலையில் மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.