
சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாளான இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளம்மிங்கும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதில், சச்சினை வீழ்த்தும் வீரர்களும் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
டேமியன் பிளம்மிங் பந்துவீச்சில் டெண்டுல்கர் போல்ட் ஆகும் பழைய கிரிக்கெட் மேட்ச் ஒன்றின் வீடியோவை பதிவிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேமியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆஸி கிரிக்கெட் வாரியத்தின் இந்த விஷம பதிவுக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த பதிவு சச்சின் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது. இந்த பதிவுக்கு எதிராக சச்சின் ரசிகர்கள் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
Some @bowlologist gold from the man himself – happy birthday, Damien Fleming!



