madona andrea - 2026நடிகர் பிரசன்னா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரசன்னா நடிக்கவிருக்கும் அடுத்த படம் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தை. `விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் பிரசன்னாவுடன், ஆண்ட்ரியாவும் மடோனா செபாஸ்டியனும் நடிக்கவுள்ளனர்.

மேலும் இந்த படத்தில் யோகிபாபு காமெடி வேடத்தில் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களை சீட் நுனிக்கு வரவழைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட இருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending