சாய்பல்லவி நடித்த ‘பிரேமம் ‘ என்ற மலையாள திரைப்படம் சென்னை உள்பட தென்னிந்திய நகரங்கள் அனைத்திலும் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போது அதில் நாகசைதன்யா மற்றும் ஸ்ருதியாசன் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. இந்தியில் இந்த படத்தின் நிவின்பாலி கேரக்டரில் அர்ஜூன்கபூரும், சாய்பல்லவி கேரக்டரில் அலியா பட்டும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை அபிஷேக் கபூர் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர்கள் கேரக்டரில் நடிக்க இரண்டு முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது