2019ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி நடக்கும் உலக கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் இந்தியா அணி, தென்ஆபிரிக்கா அணியுடன் மோத உள்ளது.
லோதா கமிட்டி பரிந்துரைகளின்படி, ஐபிஎல் போட்டிகள் நிறைவு பெற்று குறைந்து 15 நாட்களுக்கு பின்னரே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதை முன்னிட்டே 2019ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் ஜூன் 2ம் தேதிக்கு பதிலாக 4ம் தேதி அன்று தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
பிரிட்டனில் மே 30 முதல் ஜூலை 14ம் தேதி வரை நடக்கும் 2019 உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து 2019 ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29 முதல் மே 19 வரை நடைபெறும். ஐபிஎல் போட்டிகள் நிறைவு பெற்று 15 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் உலக கோப்பை போட்டிகள் மே 30ம் தேதி தொடங்க உள்ளது.



