மோடி பிறந்த நாள்… #HBDதேசத்தலைவர்மோடி வைரலாகும் டிவிட்டர் ட்ரெண்ட்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
pm-modi-with-shivaji-statue-backround
pm-modi-with-shivaji-statue-backround

பிரதமர் மோடியின் பிறந்த நாள் செப். 17 வியாழன் அன்று கொண்டாடப் படுகிறது. இதை அடுத்து டிவிட்டர் பதிவுகளில் #HBDதேசத்தலைவர்மோடி என்ற ஹேஷ் டேக்குடன் தமிழில் ட்ரெண்ட் ஆக்கப் பட்டுள்ளது.

செப்டம்பர் 17 அன்று பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாள். அன்றைய தினம், பல்வேறு நிகழ்ச்சிகள் கட்சியினரால் பெரிதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

பிரதமர் மோடி தமிழின் மீது தனியான ஆர்வத்தை, தணியாத காதலை வெளிப்படுத்தியவர். இப்போது பிரதமர் ஆக அவர் இருந்தாலும், இதற்கான வித்து ஊன்றப் பட்டது, நம் தமிழகத்தில்தான்! 

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது சென்னையில் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது எவருமே யோசித்திராத  வகையில் அப்படி ஒரு எண்ணம் எவருக்குமே தோன்றி இருக்காத ஒரு சூழலில், முதல் முறையாக சென்னையில் வைத்து, மோடி வருங்காலப் பிரதமர் என்று தமிழக வாசகர்களிடம் அறிமுகப்படுத்தினார் அதன் ஆசிரியர் சோ ராமசாமி …

தமிழ் மண்ணில் இருந்து பெற்ற அந்த முதல் ஆசிகளால், இன்று தில்லியில் பிரதமர் பீடத்தில் அமர்ந்து தனக்குள்ள தமிழ் ஆர்வத்தையும் காதலையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. 

தாம் பேசுகின்ற வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் – மன் கி பாத் நிகழ்ச்சி ஆகட்டும், அல்லது காஷ்மீரில் சென்று ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் பேச்சாகட்டும் அங்கெல்லாம் திருக்குறளும் தமிழ் பாடல்களும் அவ்வப்போது பிரதமர் மோடியின் பேச்சில் வெளிப்படத்தான் செய்துள்ளது. 

இப்போது பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு விருப்பமான தமிழ் மொழியிலேயே டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டுள்ளது இந்த ஹேஷ் டேக்…. #HBDதேசத்தலைவர்மோடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.