சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளி !

சோலார் பேனல் ஊழல், மது பார்கள் உரிம ஊழல் ஆகியவை அரசியல் சூறாவளியை கிளப்பி விட்டுள்ளதால் கேரளமாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கேரள சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது.சட்டமன்ற கூட்டம் கூடியதும் கவர்னர் பி.சதாசிவம் மாநில அரசின் கொள்கைகள் அடங்கிய உரையை வாசிக்கத் தொடங்கினார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் எழுந்து,இந்த அரசு ஊழலில் திளைக்கிறது. கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.
அதற்கு கவர்னர் பி.சதாசிவம், ‘‘ஜனநாயக ரீதியில் அரசுக்கு எதிராக உங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறீர்கள். இதுவே போதும். அரசியல் சாசனத்தின்படி எனது கடமைகளையும் செய்யவிடுங்கள்’’ என்று கூறிவிட்டு உரையை தொடர்ந்தார்.
ஆனால், அவர் உரையை வாசிக்க முடியாதவாறு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள், லஞ்ச குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று உம்மன்சாண்டியும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் ராஜினாமா செய்யவேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் காண்பித்தனர். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் பேச முயன்றார்.
எதிர்க்கட்சிகளின் செயலால் அதிருப்தி அடைந்த கவர்னர் பி.சதாசிவம், கொடியேரி பாலகிருஷ்ணனிடம், ‘‘இது நாளை உங்களுக்கும் நடைபெறலாம். உங்களுக்கு எதிர்ப்பை காட்ட உரிமை இருக்கிறது என்றால் எனக்கு ஜனநாயக கடமைப்படி உரையை வாசிக்கும் பொறுப்பு உள்ளது. அமைதியாக உட்காருங்கள் அல்லது சபையைவிட்டு வெளியேறுங்கள்’’ என்று கூறினார்
தொடர்ந்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கறைபடிந்த அமைச்சகத்தின் கொள்கைகள் எங்களுக்கு தேவையில்லை’ என்று வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு சபையில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.
ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories