அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து 37 பேர் பலி

Published:

 
அரசுப் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 37 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
குஜராத் மாநிலம், நவ்சாரி நவ்சாரியில் இருந்து உகாய் பகுதிக்கு அந்தப் பேருந்து பயணிகளுடன் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. சுபா கிராமம் அருகே பூர்ணா ஆற்றின் மீதுள்ள பாலத்தில் பேருந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக 20 அடி உயரத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 37 பேர் பலியாகினர். 24 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து இருக்கலாம் என உயிர் தப்பிய பயணிகளில் சிலர் தெரிவித்துள்ளனர்.
 

Related articles

Recent articles

spot_img