செப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு!

Published:

corona-image
corona-image

தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது என்றும், ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,91,943 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து சென்னையில் இதுவரையிலான ஒட்டுமொத்த பாதிப்பு 166029 ஆக அதிகரித்துள்ளது 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 9,453 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 5,501 பேர் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டதால், இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது 

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் நிலவரம்

district-wise-corona-details-sep-29
district-wise-corona-details-sep-29

Related articles

Recent articles

spot_img